வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் புத்திக்க சிறிவர்த்தன யாழ் . மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனை இன்றைய தினம் திங்கட்கிழமை மாவட்ட செயலக அலுவலகத்தில் சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடினார்.
இச் சந்திப்பில் யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஜே. ஏ. சந்திரசேன, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜீ. பி. ஜெயமஹ, யாழ்ப்பாண பொலீஸ் தலைமைப்பீட அதிகாரி பாலித செனவிரத்ன உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.













