வவுனியா நீதிமன்றம் முன்பாக நீதிமன்ற நடவடிக்கைகளின் போது விபத்துக்கள் ஏற்படும் வகையில் போக்குவரத்து பொலிசார் தீடிர் சோதனைகளை மேற்கொண்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
வவுனியா நீதிமன்றம் முன்பாக கடமையில் நிற்கும் போக்குவரத்து பொலிசார், நீதிமன்ற நடவடிக்கைக்காக அப் பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள நிலையில் திடீரென வாகனங்களை மறித்து சோதனை செய்வதுடன், தாம் நிறகும் திசைக்கு எதிர் திசையில் வரும் வாகனங்களையும் திடீரென வீதியை குறிக்கிட்டு வாகனத்தை மறித்து அவர்களது ஆவணங்களை சோதனை செய்து வருகின்றார்.
ஆவணங்களை பொலிசார் சோதனை செய்வது சரியானதெனினும், குறித்த பகுதியில் சன நெரிசலுக்கு மத்தியில் வானம் செல்லும் போது திடீரென வாகனங்களை மறிப்பதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயமுள்ளது.
எனவே, இது தொடர்பில் வவுனியா மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரியுளளனர்.












