கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய இரணைமடு கனகாம்பிகை அம்பாள் ஆலயத்தில் பூசை வழிபாடுகளில் ஈடுபட்டதுடன். தொடர்ந்து கனகாம்பிகை அம்பாள் ஆலய முன்றலில் இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் ஏற்பாட்டில் வருடம்தோறும் நடைபெறும் பொங்கல் நிகழ்வானது .இரணைமடு நீர்த்தேக்கத்தின் 106ஆவது ஆண்டு பொங்கல் நிகழ்வாக நடைபெற்றது.
குறித்த பொங்கல் நிகழ்வையும் பொலிஸ்மா அதிபர் அவரின் பாரியார் இணைந்து ஆரம்பித்து வைத்தனர்.தொடர்ந்து குறித்த ஆலய வளாகத்தில் பொலிஸ் சேவா வனிதா இயக்கத்தின் ஏற்பாட்டில் டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட 200குடும்பங்களுக்கான நிவாரணப்பொதிகளையும் வழங்கி வைத்தார்.குறித்த நிகழ்வில் வடமாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர், கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதிப்பொலிஸ்மா அதிபர், மாவட்ட அரசாங்கதிபர் எஸ்.முரளிதரன், பேராசிரியர் நா.பிரதீபராஜா,வடமாகாண நீர்ப்பாசப்பணிப்பாளர் ,கண்டாவளை பிரதேச செயலாளர்,கரைச்சி பிரதேச செயலாளர், உள்ளிட்ட அரச உத்தியோகத்தர்கள் ,விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர்.















