நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘அமர்க்களம்’ திரைப்படம், வெளியாகி 25 ஆண்டுகளைக் கடந்ததைக் கொண்டாடும் வகையில், எதிர்வரும் பெப்ரவரி 12ஆம் திகதி திரையரங்குகளில் அந்த திரைப்படம் மீண்டும் வெளியாகவுள்ளது.
காதலர் தின வாரத்தை முன்னிட்டு, எதிர் வரும் பெப்ரவரி 12ஆம் திகதி அன்று அமர்க்களம் திரைப்படம் வெளியாகின்றது.
இத்திரைப்படம் தற்போதைய காலத்திற்கு ஏற்ப 4K தரத்தில் புதுப்பிக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்ட ஒலி அமைப்புடன் வெளியாகவுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 20ம் திகதி அன்று நடிகை ஷாலினியின் பிறந்தநாளை முன்னிட்டு அமர்க்களம் படத்தின் டீசர் வெளியானமை குறிப்பிடத்தக்கது.
















