காஸா அமைதி சபையில் இணைய கனடாவிற்கு விடுக்கப்பட்ட அழைப்பை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று (22) மீளப் பெற்றார்.
சுவிட்சர்லாந்தின் டாவோஸில் இடம்பெற்ற பொருளாதார மன்றத்தில் மார்க் கானி அமெரிக்காவிற்கு எதிராக உரையாற்றியதை தொடர்ந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இது தொடர்பில் தனது சமூக ஊடக பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள ட்ரம்ப், கனடாவின் அழைப்பை திரும்பப் பெறுவதாக அறிவித்தார்.
இதேவேளை குறித்த குழுவில் இணைவதற்காக 30 இற்கும் மேற்பட்ட நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.
இருப்பினும் இந்த நேரத்தில் பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் உட்பட பல ஐரோப்பிய நாடுகள் பங்கேற்க மறுப்பு தெரிவித்துள்ளன.
அத்துடன் இதில் இணைய ரஷ்யாஇணக்கம் தெரிவித்துள்ளதுடன் , ஒரு பில்லியன் டொலர் பங்களிப்பதாகவும் அறிவித்துள்ளது.















