2026 ஆம் ஆண்டுக்கான வடமேல் மாகாண அகில இலங்கை வில்வித்தை போட்டியில் சாம்பியன்ஷிப்பை வென்ற இலங்கை விமானப்படை.
வடமேல் மாகாண வில்வித்தை சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 2026 வடமேல் மாகாண அகில இலங்கை வில்வித்தை சாம்பியன்ஷிப் (25.01.2025) குருநாகல், மாவதகமவில் உள்ள சமோதயா மைதானத்தில் நிறைவடைந்தது. இந்த தொடரில் பெண்கள் சாம்பியன்ஷிப்பை விமானப்படை பெண்கள் அணி வென்றதோடு விமானப்படை ஆண்களுக்கான அணியினர் இரண்டாம் இடத்தை பெற்றது.
பரிசு வழங்கும் விழாவில் இலங்கை வில்வித்தை கூட்டமைப்பின் தலைவர் (ஓய்வு) மேஜர் அஜித் திலகரத்ன, அதிகாரிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
















