2025 (2026) க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான கால அட்டவணையில் பரீட்சார்த்திகள் விசேட கவனம் செலுத்துமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக குமாரி லியனகே வலியுறுத்தியுள்ளார்.
நாளை (17) தொடங்கவுள்ள பரீட்சைக்கு முன்னதாக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறினார்.
அதன்படி, பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலும் அதன் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்திலும் வெளியிடப்பட்ட கால அட்டவணையை மட்டுமே பரீட்சார்த்திகள் கவனத்திற் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
கடந்த ஆண்டை விட இம்முறை சாதாரண தரப் பரீட்சையின் ஐந்தாவது, ஆறாவது, ஏழாவது மற்றும் எட்டாவது நாட்களுக்கான பாடங்களின் வரிசை முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், சரியான நேர அட்டவணையை மாத்திரம் பயன்படுத்துமாறு இந்திகா குமாரி லியனகே குறிப்பிட்டார்.
நாளைய பரீட்சைகள் காலை 8:30 மணிக்கு தொடங்கும்.
மேலும் பரீட்சார்த்திகள் ஒரு மணி நேரத்திற்கு முன்பே தங்கள் பரீட்சை நிலையங்களுக்கு வர வேண்டும்.
பிற்பகல் பரீட்சைகள் மதியம் 1:30 மணிக்கு தொடங்கும் என்றும், பரீட்சைார்த்திகள் மதியம் 12:30 மணிக்குள் தங்கள் நிலையங்களுக்கு வர வேண்டும் என்றும் ஆணையர் மேலும் கூறினார்.













