கன்னட நடிகர் Darshan Thoogudeepa மற்றும் அவரது மனைவி Vijayalakshmi Darshan ஆகியோர் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை Karnataka High Court நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
‘BOSS’ என்ற கன்னட திரைப்படத்தின் வெளியீட்டை தற்காலிகமாக நிறுத்தியிருந்த இடைக்காலத் தடையை நீதிமன்றம் நீக்கியதை எதிர்த்து இந்த மேன்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.
விசாரணையின் போது, படத்தின் தயாரிப்பு நிறுவனமான Siri Productions சார்பில் ஆஜரான மூத்த சட்டத்தரணி விவேக் சுப்பா ரெட்டி, திரைப்படம் ஜூன் 30ஆம் திகதி வரை வெளியிடப்படாது என நீதிமன்றத்தில் உறுதியளித்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், வழக்கின் அடுத்த விசாரணையை ஜூன் 30ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.
‘‘BOSS’ திரைப்படம் தன்னைச் சுற்றியுள்ள ரேணுகாசுவாமி கொ*லை வழக்கை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக நடிகர் தர்ஷன் குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்து மார்ச் மாதம் பெங்களூரு நீதிமன்றம் திரைப்பட வெளியீட்டுக்கு இடைக்காலத் தடை விதித்திருந்தது.
பின்னர் மே 2ஆம் திகதி அந்தத் தடையை நீக்கியதால், திரைப்படத்தை வெளியிட அனுமதி கிடைத்தது. இதனை எதிர்த்து தர்ஷன் உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
திரைப்படத்தின் டீசர் மற்றும் ஒரு நிமிட முன்னோட்டக் காட்சி, ரேணுகாசுவாமி கொ*லை வழக்கின் சம்பவங்களுடன் ஒற்றுமை கொண்டுள்ளதாகவும், இது தனது பெயருக்கும் நீதியான விசாரணை உரிமைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் தர்ஷன் தரப்பு தெரிவித்துள்ளது.
33 வயதான ரேணுகாசுவாமி கொ*லை வழக்கில் தர்ஷன், நடிகை Pavithra Gowda உள்ளிட்டோர் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வருகின்றனர். எனினும், இந்த வழக்கு தொடர்பான இறுதி தீர்ப்பு இதுவரை வழங்கப்படவில்லை

















