எட்டு நாட்களின் பின்னர் வெனிசுலா நிலநடுக்கத்தில் சிக்கியவர் உயிருடன் மீட்பு!
வெனிசுலாவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்களால் இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் எட்டு நாட்களாகச் சிக்கியிருந்த ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
140 தொன் இடிபாடுகளுக்கு அடியில் ஹெர்னான் கில் எனபவரை கண்டறிந்த பின்னர், அவசரக்காலப் பணியாளர்கள் 100 மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி அவரை மீட்டனர்.
மீட்பு நடவடிக்கையின் போது, வெனிசுலா, சிலி, கோஸ்டாரிகா, எல் சால்வடார், மெக்சிகோ, போர்ச்சுகல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த மீட்புக் குழுக்கள் அவரை அடையப் பணியாற்றிய வேளையில், கில்லுக்குத் தண்ணீர் கொடுக்கப்பட்டு, நரம்பு வழிச் சொட்டு மருந்து ஏற்றப்பட்டது.
வியாழக்கிழமை (02) மாலை நிலவரப்படி, ஜூன் 24 அன்று வெனிசுலாவைத் தாக்கிய நிலநடுக்கங்களில் 2,595 பேர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் பல்லாயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர்.












