இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் ஃபேஸ்புக் கணக்கிலிருந்து ஒரு காணொளி சிறிது நேரம் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, மெட்டா (Meta) நிறுவனம் அதற்காக மன்னிப்பு கோரியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்தப் பதிவு பின்னர் மீண்டும் மீட்டமைக்கப்பட்டுள்ளதாக அந் நிறுவனம் கூறியுள்ளது.
இன்ஸ்டாகிராமில் மோடியைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ள நிலையில், இந்த நீக்க நடவடிக்கை நிகழ்ந்துள்ளது.
இன்று (28) அதிகாலையில், Gen Z தலைமுறைப் போராட்டக்காரர்களுக்கான மோடியின் முதல் ‘செல்ஃபி’ வீடியோ உரைக்கான அணுகலை ஃபேஸ்புக் கட்டுப்படுத்தியது. இந்தியாவில் காக்ரோச் ஜனதா கட்சியின் (CJP) தலைமையில் நடைபெற்று வரும் மாணவர் போராட்டங்களுடன் இந்த வீடியோ தொடர்புடையதாக இருந்தது.
இந்த நிலையில் அந்தக் காணொளியைப் பார்க்க முயன்ற பயனர்களுக்கு, அது கிடைக்கவில்லை என்பதைக் குறிக்கும் செய்தி ஒன்று மெட்டாவில் காட்டப்பட்டது.
ஆரம்பத்தில் இது குறித்த விரிவான விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை.
பின்னர், இந்த நீக்கம் குறித்து மெட்டா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் அறிக்கை வெளியிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதில், தவறுதலாகவே அந்த உள்ளடக்கம் நீக்கப்பட்டதாகவும், பின்னர் அது மீண்டும் இணையத்தில் பதிவேற்றப்பட்டதாகவும் அந்நிறுவனம் கூறியது.
இந்த நிலையில் இந்த சம்பவத்தை இந்திய அரசாங்கம் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் ஏற்கனவே மெட்டா மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் உலகளாவிய தலைவர்களுக்கு இது தொடர்பில் சம்மன்களை அனுப்பியுள்ளது.















