அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு நிலையம் இதுவரை 59.3 மில்லியன் முறை போடக்கூடிய தடுப்பூசிகளை விநியோகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
நேற்று (சனிக்கிழமை) காலை நிலவரப்படி, அவற்றில் 39 மில்லியன் தடுப்பூசிகள் போடப்பட்டதாக அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது.
சுமார் 30 மில்லியன் பேருக்கு முதல் தடுப்பூசி போடப்பட்டது என்றும் 8.3 மில்லியன் பேருக்கு இரண்டாவது தடுப்பூசி போடப்பட்டது என்றும் அந்நிலையம் தெரிவித்தது.
இதேவேளை நீண்டகாலப் பராமரிப்பு நிலையங்களில் வசிப்போருக்கு 4.6 மில்லியன் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன என்றும் அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவில் மடர்னா, பைசர் மற்றும் பயோஎன்டெக் ஆகிய தடுப்பூசிகள் மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.