அமெரிக்காவின் ஃபைஸர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளதாக ஜப்பானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுவே ஜப்பானில் பயன்பாட்டுக்கு வரும் முதல் தடுப்பூசி ஆகும்.
அடுத்த வார மத்தியில் கொரோனா தடுப்பூசி திட்டம் தொடங்கப்படும் என்றும், முதல்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் பத்தாயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்படும் என்றும் பிரதமர் யோஷிஹைட் சுகா அறிவித்துள்ளார்.
இந்த ஆண்டு மத்தியில் நாட்டு மக்கள் அனைவருக்கும் தேவையான தடுப்பூசி மருந்துகளை பெற முடியும் என அரசாங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
ஜப்பானில் கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதால், அதற்கு முன்பாக மூன்றாவது அலை நோய்த்தொற்றுகளை தணிக்கும் முயற்சிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.