சிங்கராஜ வனப்பகுதியைச் சுற்றியுள்ள தனியாருக்குச் சொந்தமான நிலங்களை, விரைவில் அரசாங்கம் பொறுப்பேற்கவுள்ளது.
வனப் பாதுகாப்பு திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் நிஷாந்த எதிரிசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
அவ்வாறான சுமார் 400 ஹெக்டேயர் நிலங்கள் உள்ளதென மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நிலப்பகுதி காடாக இருந்த போதிலும், தனியார் நிலப்பரப்பாக காணப்படுவதால் அதில் இடம்பெறும் காடழிப்பைத் தடுப்பதற்கு வனப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ், வனப் பாதுகாப்பு திணைக்களத்திற்கு எவ்வித அதிகாரமும் இல்லையெனவும் அவர் கூறியுள்ளார்.
குறித்த காணிகளைக் கையகப்படுத்துவதன் ஊடாக சிங்கராஜ வனப் பகுதியின் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்த முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.