நாங்கள் மீண்டும் ஆட்சிபீடம் ஏறினால், ஏராளமான புதிய திட்டங்களை மக்களுக்கு வழங்குவதற்கு தயாராக இருக்கின்றோம் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கடலூர்- சிதம்பரம் தொகுதி அ.தி.மு.க.வேட்பாளர் எம்.எல்.ஏ பாண்டியனை ஆதரித்து, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த தேர்தல் பிரசார கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மேலும் கூறியுள்ளதாவது, “எமது ஆட்சியிலேயே சட்டம் – ஒழுங்கு பிரச்சினை இல்லாத மாநிலங்களில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது.
மேலும், டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவித்து, அதனையும் பாதுகாத்து தந்துள்ளோம். இவ்வாறு மக்கள் பயன்பெறும் வகையில் பல சிறந்த திட்டங்களை வழங்கியுள்ளோம்.
அந்தவகையில் எமது தலைமையில் ஆட்சி மீண்டும் தமிழகத்தில் அமையப்பெற்றால், ஆறு சிலிண்டர் இலவசம் மற்றும் முதியோர் உதவித்தொகை உயர்வு என ஏராளமான திட்டங்களை வழங்கத் தயாராக இருக்கின்றோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.