பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், ஆறாயிரத்து 303பேர் பாதிக்கப்பட்டதோடு 95பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஐந்தாவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இதுவரை 42இலட்சத்து 80ஆயிரத்து 882பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு இலட்சத்து 25ஆயிரத்து 926பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஐந்து இலட்சத்து 61ஆயிரத்து 820பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 968பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 35இலட்சத்து 93ஆயிரத்து 136பேர் பூரண குணமடைந்துள்ளனர்.