பிரிட்டனின் வரலாற்று அடிமை வர்த்தகத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் பாதிக்கப்பட்ட நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
அன்டிகுவா மற்றும் பார்புடாவில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டின் நிறைவில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பாதிக்கப்பட்ட ஆபிரிக்க மற்றும் கரீபியன் நாடுகளுடன் கட்டமைக்கப்பட்ட, காலவரையறையுடன் கூடிய பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
பிரிட்டிஷ் பிரதமர் ஆண்டி பேர்ன்ஹாம், நாட்டின் வரலாற்றுப் பங்களிப்புக்காக உத்தியோகபூர்வ மன்னிப்புக் கோருவது தொடர்பில் திறந்த மனப்பான்மையுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.எனினும், அடிமை வர்த்தகத்திற்காக நேரடி நிதி இழப்பீடு வழங்கும் கோரிக்கையை பிரிட்டிஷ் அரசாங்கம் நிராகரித்துள்ளது.

















