இது சாதாரண ஸ்மார்ட் கடிகரம் அல்ல. ‘Temple’ எனப்படும் நவீன சுகாதாரத் தொழில்நுட்ப அணியக்கூடிய சாதனமாகும்.
இந்தச் சாதனம் மூளையைச் சார்ந்த இரத்த ஓட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள், உடல் சோர்வு, மன அழுத்தம் மற்றும் உடல் மீட்சியின் நிலை உள்ளிட்டவற்றைக் கண்காணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பொதுவான உடற்பயிற்சி கண்காணிப்புக் கருவிகள் இதயத் துடிப்பு மற்றும் தூக்கம் போன்றவற்றைக் கண்காணிக்கும் நிலையில், இந்தச் சாதனம் மூளையைச் சார்ந்த இரத்த ஓட்ட மாற்றங்களைக் கண்காணிப்பதில் கவனம் செலுத்துகிறது.
கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில் உடல் வலிமைக்கு இணையாக மன ஒருமைப்பாடும் முக்கியமானது. எனவே, இத்தகைய தொழில்நுட்பங்கள் எதிர்காலத்தில் வீரர்களின் பயிற்சி, ஓய்வு மற்றும் விளையாட்டுத் திறனை மேம்படுத்த உதவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது விளையாட்டுத்துறை உடல் திறனுடன் மட்டுமன்றி, நவீன தொழில்நுட்பத்துடனும் இணைந்து புதிய பரிமாணத்தை நோக்கி நகர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

















