மத்திய மாகாணத்தில் முதல் தடவையாக கம்பளை பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் அத்தியட்சகர் காரியாலயத்தின் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மேலும் ஏழு பொலிஸ் நிலையங்களில் உள்ள பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் பொலிஸ் உறுப்பினர்கள் கலந்துகொண்டு கம்பளை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் தீபாவளி தினத்தை முன்னிட்டு விஷேட பூஜை வழிப்பாடுகள் இன்று வெகுவிமர்சையாக நடைப்பெற்றது.
தீபாவளி தினத்தை முன்னிட்டு கம்பளை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் பொலிஸ் உயர் மட்ட அதிகாரிகள் தலைமையில் விஷேட பூஜைகள் நடைப்பெற்றது,
கம்பளை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் புதிய நிர்வாகம் தலைமையில் தலைவர் பாலச்சந்திரன் (ரவி) செயலாளர் சரவணன் பொருளாளர் காந்தன் அவர்கள் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் தலைமையிலும் இந்த விஷேட பூஜைகள் ஒழுங்கு செய்து இருந்தனர் .
இந்த விஷேட பூஜையில் அதிகமான பொலிஸ் அதிகாரிகள் கலந்துகொண்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது .














