நாட்டில் அறுவடை செய்யப்படும் நெல்லை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கை ஆறு மாவட்டங்களிலும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மார்ச் 8ஆம் திகதி முதல் ஏப்ரல் 7ஆம் திகதி வரை இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அந்தவகையில், அனுராதபுரம், மட்டக்களப்பு, அம்பாறை, பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை, குருநாகல் ஆகிய மாவட்டங்களில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இரண்டு இலட்சம் மெற்றிக் தொன் நெல்லை ஒரு மாதத்திற்குள் கொள்வனவு செய்யும் இலக்கை நிறைவேற்றுவது இதன் நோக்கமாகும் என்று அவர் கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் கீழ் 3 இலட்சம் மெற்றிக் தொன் நெல்லை கையிருப்பாக வைத்திருப்பதன் மூலம் நெல் மற்றும் அரிசி மோசடி நாட்டில் ஏற்படுவதை குறைக்க முடியும் என்றும் அமைச்சர் அங்கு சுட்டிக்காட்டினார்.