பதுளை- பசறை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கமைய உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்வடைந்துள்ளது.
மேலும் குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த ஏனையோர் பசறை மற்றும் பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களில் பலர் கவலைக்கிடமாக உள்ளமையினால் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
இன்று (20) காலை 07.15 மணியளவில், லுனுகலயில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து, எதிர் திசையில் இருந்து வந்த டிப்பர் வண்டிக்கு இடமளிக்க முயன்றபோதே, வீதியில் இருந்து விலகி 200 அடி பள்ளத்தாக்கில் வீழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக பசறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.