ஐஸ்லாந்தின் தலைநகர் ரெய்காவிக் அருகே ஏற்பட்ட எரிமலை வெடிப்பு தற்போது குறைந்து வருவதாக நில அதிர்வு கண்காணிப்பு நிலையம் தெரிவித்துள்ளது.
வழக்கத்திற்கு மாறாக குறுகிய காலத்தில் குறிப்பாக கடந்த பல வாரங்களாக 50,000 க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வெடிப்பு குறைவடைந்துவரும் நிலையில் எரிமலை வெடிப்பினால் எவ்வித ஆபத்தும் இல்லை என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐஸ்லாந்தில் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு குறித்த பகுதியில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.