கடனுக்குப் பதிலாக இரண்டாம் நிலை மாணவர்களுக்கு கூடுதல் உதவியினை என்டிபி தலைவர் ஜக்மீத் சிங் கோரியுள்ளார்.
பழைய மற்றும் புதிய பட்டதாரிகளுக்கு ஒரு மாணவருக்கு கூட்டாட்சி மாணவர் கடனில் டொலர்கள் வரை இரத்து செய்வது அவரது திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
தொற்றுநோய் முடியும் வரை மாணவர் கடன் கொடுப்பனவுகளில் தடையை மீண்டும் நிலைநிறுத்தவும், அனைத்து கூட்டாட்சி மாணவர் கடன்களுக்கான வட்டி நிரந்தரமாக நீக்கவும், புதிய பட்டதாரிகளுக்கு கூட்டாட்சி மாணவர் கடன்களை திருப்பிச் செலுத்தாமல் ஐந்தாண்டு கால அவகாசம் வழங்கவும், கல்விக் கட்டணத்தை இலவசமாக்குவதில் பணியாற்றவும் அவர் விரும்புகிறார்.