கொரோனா தொற்றில் இருந்து மேலும் 299 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
இதனை அடுத்து கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 87 ஆயிரத்து 58ஆக அதிகரித்துள்ளது.
தற்போது 90 ஆயிரத்து 200 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அதில் 2 ஆயிரத்து 596பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
மேலும் இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றினால் 546 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.