பில்லா 2, தென்மேற்கு பருவக்காற்று உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நடிகர் தீப்பெட்டி கணேசன் காலமானார்.
உடல்நலக் குறைவால் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அவர் நேற்று இரவு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவரின் குடும்பத்தினருக்கு திரையுலக பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ரேணிகுண்டா திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான அவர், பல்வேறு குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வந்தார்.
பின்னர் படவாய்ப்புகள் நலிவடைந்த நிலையில், பொருளாதார ரீதியில் பல இன்னல்களை சந்தித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.