சுற்றாடல் அதிகார சபையின் ஏற்பாட்டில் ”ஆறுகளை காத்திடுவோம்.” தேசிய வேலைத்திட்டம் இன்று (திங்கட்கிழமை) கிளிநொச்சியிலும் முன்னெடுக்கப்பட்டது.
கிளிநொச்சி 155ஆம் கட்டை பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எச்.எம்.சார்ள்ஸ், யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரு்ம, நாடாளுடன்ற குழுக்களின் பிரதி தலைவருமான அங்கயன் இராமநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது இன்றைய நாளின் நினைவாக றையாற்று பகுதியில் மரக்கன்றுகளும் நாட்டி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.