பிணைமுறி தொடர்பான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட ஏழு பேருக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் மார்ச் 31ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவை, கொழும்பு மேல் நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் குழு பிறப்பித்துள்ளது.
இதேவேளை, ரவி கருணாநாயக்க உள்ளிட்டோரைக் கைது செய்வதற்குக் பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையை வலுவற்றதாக்கக் கோரிய மனுவை முன்கொண்டு செல்வது குறித்து எதிர்வரும் மே ஏழாம் திகதி சமர்ப்பணங்களை முன்வைக்குமாறு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கியினால் முன்னெடுக்கப்பட்ட முறிகள் ஏலத்தில், தவறான முறையில் 50 பில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய முறிகள் பயன்படுத்தப்பட்டமை தொடர்பாக வழக்கு இடம்பெற்று வருகின்றது. இதில், ரவி கருணாநாயக்க உட்பட ஏழு பேர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.