எகிப்தின் சுயஸ் கால்வாயில் சிக்கிக்கொண்டுள்ள கப்பலை இன்று ஞாயிற்றுக்கிழமை மாலைக்குள் மிதக்கக்கூடிய நிலைக்கு கொண்டுவர முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
உலகின் பரபரப்பான வர்த்தக கப்பல் பாதைகளில் ஒன்றான சுயஸ் கால்வாயில் கடந்த செவ்வாய்க்கிழமை கப்பல் ஒன்று தரைதட்டிக்கொண்டது.
இதன் காரணமாக இருபுறமும் சுமார் 300 க்கும் மேற்பட்ட கப்பல்கள் போக்குவரத்தை மேற்கொள்ளமுடியாமல் தரித்து நிற்கின்றன.
சனிக்கிழமை நிலவரப்படி சுமார் 20,000 டன் மணல் கிண்டப்பட்டுள்ளதாகவும் வலுவான அலைகளும் காற்றும் கப்பலை விடுவிப்பதற்கான முயற்சிகளை சிக்கலாக்கியிருந்தாலும் கப்பலை சற்று திருப்ப முடிந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.