அவன்கார்ட் பிரைவேட் லிமிடெட் தலைவர் நிசங்க சேனாதிபதி மீது விதிக்கப்பட்ட பயணத் தடையை கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று (திங்கட்கிழமை) நீக்கியுள்ளது
அவன்கார்ட் தலைவர் நிசங்க சேனாதிபதி, முறையான உரிமம் இன்றி காலி கடற்கரையில், எம்.வி.அவங்கார்ட் கப்பலில், தானியங்கி துப்பாக்கிகள் மற்றும் நேரடி வெடிமருந்துகளை வைத்திருந்ததாக அவர் மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக வெளிநாடு செல்ல வேண்டிய தேவை இருக்கின்றமையினால், நிசங்க சேனாதிபதி மீது விதிக்கப்பட்டுள்ள பயணத் தடையை இடைநீக்கம் செய்யுமாறு அவரது சட்டத்தரணி, உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்
இந்நிலையில் குறித்த வழக்கினை விசாரணை நடத்திவரும் மூவரடங்கிய நீதிபதிகள் கொண்ட குழு, சட்டத்தரணியின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதுடன் பயணத் தடையையும் நீக்கி உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஏப்ரல் 23ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.