சுதந்திரக்கட்சி தலைமையிலான அரசாங்கத்தை அமைப்பதற்காக கட்சியை வலுப்படுத்தும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இன்று கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், நாட்டிற்கும் அதன் மக்களின் எதிர்காலத்திற்காகவே தற்போதைய அரசாங்கத்திற்கு சுதந்திரக்கட்சி அதிகபட்ச ஆதரவை வழங்குவதாகவும் கூறினார்.
இருப்பினும் சுதந்திரக்கட்சி தலைமையிலான அரசாங்கம் ஸ்தாபிப்பதை உறுதி செய்ய முற்போக்கான மற்றும் தேசப்பற்றுள்ள கட்சிகளை அடையாளம் காண வேண்டும் என்றும் மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
இதேவேளை புதிய அரசியலமைப்பில், இரட்டை குடியுரிமை பெற்றவர்களும் தேர்தலில் போட்டியிட முடியும் என 20 ஆவது திருத்தம் மூலம் வழங்கப்பட்ட அனுமதியை இரத்து செய்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார்.