கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு சலுகை விலையில் பொருட்களைப் பெறுவதற்கான சந்தை பொறிமுறை அமைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொன்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தேசிய கொள்கை அறிக்கையின் கீழ் உள்ளூர் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தும் விதமாக அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
மேலும் பொதுத்துறையின் தலையீட்டால் உயர்தர பொருட்களை நியாயமான விலையில் வழங்க முடியும் என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.