குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட மூவரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த மூவரையும் எதிர்வரும் ஏப்ரல் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீதிமன்றம் இன்று (புதன்கிழமை) உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஷானி அபேசேகர உள்ளிட்ட மூவரும் போலி சாட்சியங்களை உருவாக்கிய குற்றச்சாட்டில், கடந்த வருடம் ஜுலை 31 ஆம் திகதி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.