ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட அமைச்சரவை துணைக்குழுவின் அறிக்கை திங்கட்கிழமை ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் அவர்கள் முன்வைத்த பரிந்துரைகளை ஆய்வு செய்ய பெப்ரவரி 19 ஆம் திகதி அமைச்சரவை துணைக்குழு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டது.
இந்நிலையில் கம்பஹாவில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இந்த அறிக்கை திங்களன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட பின்னர் அவரால் பகிரங்கப்படுத்தப்படும் என்றார்.
மேலும் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் பார்த்துக் கொள்வதை அரசாங்கம் உறுதி செய்யும் என்றும் கடந்த அரசாங்கத்தின் அலட்சியம் மற்றும் பொறுப்பேற்கத் தவறியமை நாட்டின் பொருளாதாரத்தையும் பாதித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.