தீவிரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய 11 இஸ்லாமிய அமைப்புகளை தடைசெய்ய சட்டமா அதிபர் அங்கீகாரம் வழங்கியுள்ளார்.
சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷார ஜெயரத்ன இன்று (புதன்கிழமை) இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அதன்படி, யுனைடெட் தௌஹீத் ஜமாத், சிலோன் தௌஹீத் ஜமாத், இலங்கை தௌஹீத் ஜமாத், அனைத்து இலங்கை தௌஹீத் ஜமாத், ஜமியத்துல் அன்சாரி சுன்னத்துல் மொஹமதியா போன்ற அமைப்புக்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
அத்தோடு தாருல் ஆதார் @ ஜமியுல் ஆதர், இலங்கை இஸ்லாமிய மாணவர் இயக்கம், ஈராக் மற்றும் சிரியா ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு, அல்கொய்தா, சேவ் த பேர்லஸ் மற்றும் சூப்பர் முஸ்லீம் போன்ற அமைப்புக்கள் தடை செய்யப்பட்டுள்ளன.