கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டு வெவ்வேறு வகையினால் நான்கு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் மூவர் கொழும்பைச் சேர்ந்தவர்களென ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட மூன்று பேர், கொழும்பில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் டென்மார்க்கில் இருந்து வருகை தந்தவர்கள் என ஜெயவர்தனபுர பல்கலைக்கழகம் கூறியுள்ளது.
அதேபோன்று கொரோனா வைரஸ் மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட மற்றுமொருவர் தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இவர் ஐக்கிய இராச்சியத்தில் இருந்து வருகை தந்தவர் எனவும் பல்கலைக்கழகம் சுட்டிக்காட்டியுள்ளது.
அண்மையில் ஐக்கிய இராச்சியத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பி 1.1.7 பரம்பரைக்கு சொந்தமான கொரோனா வைரஸ் தொற்றின் புதிய மாறுபாடு, பிப்ரவரி மாதம் இலங்கையின் சில பகுதிகளில் முதலில் கண்டறியப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸின் மாறுபாடு மார்ச் மாதத்தில் இலங்கையில் கண்டறியப்பட்டது.
மேலும் குறித்த கண்டறிதல்களை, ஸ்ரீஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறை இயக்குநர் டாக்டர். சந்திமா ஜீவேந்திர மேற்கொண்டு வருகின்றார்.
டென்மார்க்கில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றின் மாறுபாடு அண்மையில் இலங்கையில் கண்டறியப்பட்ட புதிய மாறுபாடு ஆகும்.