இந்தியாவின் சீரம் நிறுவனத்திடம் இருந்து மேலும் ஒரு தொகுதி அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிக்காக இலங்கை தொடர்ந்து காத்திருப்பதால், இரண்டாவது டோஸை மக்களுக்கு வழங்கும் நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தலைமையிலான கொரோனா வைரஸ் கட்டுப்படுத்துவது தொடர்பான விசேட செயலணியில் விவாதித்ததாக அறிய முடிகின்றது.
12 வாரங்களுக்கு மாறாக 16 வாரங்களுக்குப் பின்னர் இரண்டாவது தடுப்பூசியை வழங்குவது குறித்து சுகாதார அமைச்சு ஆய்வு செய்து இறுதி முடிவை எடுக்க உள்ளது.
கோவிஷீல்ட் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை ஜனவரி முதல் இலங்கை 900,000 பேருக்கு செலுத்தியுள்ளது. இருப்பினும் சீரம் நிறுவனம் தடுப்பூசியின் ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
சீரம் நிறுவனம் தடுப்பூசி ஏற்றுமதியை நிறுத்தியுள்ளதால், முதல் டோஸ் பெற்ற அனைவருக்கும் இரண்டாவது டோஸ் வழங்க முடியாது என்ற கவலைகள் எழுந்துள்ளன.
இருப்பினும் ஏப்ரல் மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில் கோவிஷீல்ட் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸை வழங்க முடியும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.