வடமேற்கு சீனாவின் ஜின்ஜியாங் பிராந்தியத்தில் வெள்ளத்தில் மூழ்கிய நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிக்கொண்ட 08 சுரங்கத் தொழிலாளர்கள் மீட்கப்பட்ட நிலையில் 21 பேர் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (சனிக்கிழமை) 29 சுரங்கத் தொழிலாளர்கள் பணிபுரிந்தபோது குறித்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக அந்நாட்டு அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை 12 சுரங்கத் தொழிலாளர்கள் மட்டுமே சுரங்கத்தில் தற்போது சிக்கியிருப்பதாக தெரிவிக்கப்படும் அதேவேளை அவர்கள் இன்று மீட்கப்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவின் கடலோர ஷாண்டோங் மாகாணத்தில் தங்க சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிப்பைத் தொடர்ந்து ஜனவரி மாதம் 10 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்திருந்தனர்.
மேலும் டிசம்பரில், தென்மேற்கு நகரமான சோங்கிங்கில் சுரங்கத்தில் சிக்கி 23 பேர் கொல்லப்பட்ட அதே இடத்தில் மூன்று மாதங்களுக்கு முன்பு, 16 பேர் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.