பாகோ நகரில் நடந்த போராட்டத்தில் மியன்மார் பாதுகாப்பு படையினரால் 80 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
கொல்லப்பட்டவர்களின் உடல்களை இராணுவம் எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது இருப்பினும் உண்மையான இறப்பு எண்ணிக்கை வெளியிடப்படவில்லை.
படையினர் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தியதாகவும், வீதியில் நகரும் அனைவரையும் சுட்டுக் கொன்றதாகவும் சாட்சிகள் உள்ளூர் ஊடகங்களுக்குத் தெரிவித்தனர்.
கடந்த பெப்ரவரி மாதம் இடம்பெற்ற இராணுவ ஆட்சி கவிழ்ப்பை அடுத்து இடம்பெறும் போராட்டத்தில் 600 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
அதிகாரத்தின் மீதான தனது பிடியைத் தக்க வைத்துக் கொள்ள இராணுவம் வன்முறைகளை கையில் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.