கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியில் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஈக்வடோரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெறவுள்ளது.
17,000 க்கும் அதிகமான உயிர்களைக் கொன்ற கொரோனா தொற்றினால் வரலாற்றில் மிக மோசமான பொருளாதார வீழ்ச்சியை நாடு சந்தித்த நிலையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.
மேலும் நாட்டின் 24 மாகாணங்களில் தலைநகர் குயிட்டோ மற்றும் மிகப்பெரிய நகரமான குயாகுவில் உள்ளிட்ட எட்டு மாகாணங்களில் தற்போது சுகாதார அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
முன்னாள் இடதுசாரி ஜனாதிபதி ரஃபேல் கொரியாவின் அரசியல் பாதுகாவலரான 36 வயதான முன்னாள் அமைச்சர் அண்ட்ரேஸ் அராஸின் மற்றும் மூன்று முறை ஜனாதிபதி வேட்பாளரான 65 வயதான முன்னாள் வங்கியாளர் கில்லர்மோ லாசோ ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இதில் அண்ட்ரேஸ் அராஸ் வெற்றியைப் பெற முடியும் சில கருத்துக் கணிப்புக்கள் தெரிவித்த நிலையில் பெப்ரவரி 7 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட முதல் சுற்று வாக்கெடுப்பில் அவர் முன்னிலை பெற்றார்என்பது குறிப்பிடத்தக்கது.