கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்ட அஸ்ட்ராசெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் குறித்து இன்று (12) விசேட கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
இரண்டாவது டோஸ் தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு செலுத்த அரசாங்கத்திடம் சுமார் 230,000 தடுப்பூசிகள் உள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இன்று நடைபெற்ற நிபுணர் குழுவின் கலந்துரையாடலின் பின்னர் இந்த விடயம் தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்தார்.
இரண்டாவது டோஸ் தடுப்பூசி முதல் ஊசி போட்ட 10 முதல் 12 வாரங்களுக்கு இடையில் கொடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆரம்பத்தில் 10 வாரங்களில் இரண்டாவது டோஸ் கொடுக்க முடிவு செய்திருந்தபோதும் தற்போது மேலதிகமாக 230,000 தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன என்றும் அவைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.