தமிழ் சிங்கள் சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கும் பணி இன்று (செவ்வாய்க்கிழமை) இரண்டாவது நாளாகவும் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்றினால் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்த மக்களுக்கு அரசாங்கம் வழங்கும் கொடுப்பனவுக்கு மேலதிகமாக இந்தத் தொகை வழங்கப்படுகிறது.
அதன்படி, சமுர்த்தி பயனாளிகள், குறைந்த வருமானம் பெறுவோர், முதியோர் கொடுப்பனவுகளை பெறுவோர், அங்கவீன கொடுப்பனவை பெறுவோர், சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டோர் ஆகியோருக்கு இந்தக் கொடுப்பனவு வழங்கப்படுகிறது
இதன் கீழ் இதுவரையில் 12 இலட்சத்து 33 ஆயிரத்து 55 பேருக்கு இந்தக் கொடுப்பனவு வழக்கப்பட்டுள்ளது.
இந்தக் கொடுப்பனவை வழங்குவதற்காக கொழும்பு மாவட்டத்தில் இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
கேகாலை’, குருநாகல், கிளிநொச்சி, கண்டி மற்றும் களுத்துறை மாவட்டங்களில் இந்த வேலைத்திட்டம் வெற்றிகரமான முறையில் முன்னெடுக்கப்படுகிறது.
அத்தோடு, மொனராகலை, பொலன்னறுவை மாவட்டங்களுக்கும் இந்தக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.