கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இயக்கச்சி பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஆள் இல்லாத கார் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டதால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சந்தேகத்திற்கிடமான முறையில் நேற்றைய தினம் ஒரு கார் ஆள் இல்லாமல் நிற்பதை அவதானித்த சிலர் பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.
இதையடுத்து, குறித்த பகுதிக்குச் சென்ற பளை பொலிஸாரும் இராணுவத்தினரும் காரை சோதனையிட்டபோது காரின் கதவுகள் அடைக்கப்பட்டிருந்ததையடுத்து, பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு தகவல் வழங்கியிருந்தனர்.
இதையடுத்து இன்று காலை விசேட அதிரடிப்படையின் உதவியுடன் காரின் கதவுகள் திறக்கப்பட்டு பரிசோதனையிடப்பட்டது.
இந்த நிலையில், காரின் பல பாகங்கள் திருட்டு போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் குறித்த காரானது தென்னிலங்கையில் திருட்டுபோன காராக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரையில் எவரும் கைது செய்யப்படாத நிலையில், மேலதிக விசாரனைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.