எமது நாட்டினை ஹொங்கொங் போன்று ஆள முடியாது என தேசிய மரபுரிமைகள், கலைக்கலாசார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுக நகரம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடக சந்திப்பில் விதுர விக்ரமநாயக்க மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் சட்டம் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.
அவ்வாறு இல்லாமல் ஹொங்கொங் போன்ற தனி நிர்வாக பிரிவை நாட்டில் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
முதலீட்டாளர் யார் என்பது முக்கியமல்ல. நிலம் தொடர்பிலான சட்டம் அனைவருக்கும், எல்லா இடங்களுக்கும் பொருந்தும்.
அத்துடன் இந்த நடவடிக்கைகள் மக்களின் நலனுக்காக மேற்கொள்ளப்பட்டமையினால் அது நாட்டின் முன்னேற்றத்திற்கு பெரும் உத்வேகத்தை அளிக்குமென்று நம்புகின்றேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.