கொரோனா தொற்றினால் உலகளவில் பதிவாகிய இறப்பு எண்ணிக்கை மூன்று மில்லியனைத் தாண்டிவிட்டதாக ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
புதிய நோயாளிகள் மற்றும் இறப்பு விகிதத்தில் தொடர்ந்து அதிகரித்து வருவதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் எச்சரித்த மறுநாளே இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றின் இரண்டாவது அலையை எதிர்கொள்ளும் இந்தியாவில் நேற்றுமட்டும் சுமார் 230,000 க்கும் மேற்பட்ட புதிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதன்படி தொற்று பரவல் ஆரம்பித்ததில் இருந்து இதுவரை உலகளவில் 140 மில்லியனிற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
அமெரிக்கா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் அதிகளவிலான நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ள அதேவேளை அங்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான இறப்புகள் பதிவாகியுள்ளன.
கடந்த வாரம் உலகம் முழுவதும் ஒரு நாளைக்கு சராசரியாக 12,000 இறப்புகள் பதிவாகியுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.


















