ஐயாயிரம் ரூபாய் கொடுப்பனவு இதுவரை வழங்கப்படாதவர்களுக்கு நாளை (திங்கட்கிழமை) முதல் வழங்கப்படும் என சமூர்த்தி பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி தெரிவித்தார்.
எதிர்வரும் வாரத்தின் முதல் சில நாட்களில் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை வழங்கி நிறைவு செய்ய எதிர்ப்பார்த்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதற்கு தேவையான நிதியை சமூர்த்தி வங்கிகளுக்கு அனுப்பியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இல்லையென்றால் உறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்களை தங்களிடம் சமர்ப்பித்து தேவையான நிதிகளை அந்தந்த பகுதிகளுக்கு பெற்றுக்கொள்ளுமாறு கோரியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

















