சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரஷ்ய எதிர்க்கட்சி உறுப்பினர் அலெக்ஸி நவல்னிக்கு சிகிச்சை அளிக்காவிட்டால் அடுத்த சில நாட்களுக்குள் அவர் இறந்துவிடுவார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
எந்த நேரத்திலும் அவர் மாரடைப்பு அல்லது சிறுநீரக செயலிழப்பு ஏற்படக்கூடும் என சமீபத்திய இரத்த பரிசோதனை முடிவுகள் காட்டுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
கடுமையான முதுகுவலி மற்றும் கால் உணர்வின்மைக்கு முறையான சிகிச்சை கோரி கடந்த 18 நாட்களாக 44 வயதான நவால்னி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் ஆட்சிக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அவர் கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் விஷம் கொடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
இதனை அடுத்து ஜேர்மனிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட அவர் குணமடைந்ததை அடுத்து கடந்த ஜனவரி மாதம் 17ஆம் திகதி மீண்டும் ரஷியா சென்ற நிலையில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.