மத தீவிரவாதத்தைக் கருவியாகப் பயன்படுத்தி அரசியல் சக்தியை பலப்படுத்துவதற்கான முயற்சியே ஈஸ்டர் தாக்குதல் என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல்கள் ஒரு குழுவால் கட்டவிழ்த்து விடப்பட்ட தாக்குதல் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல்களில் மரணித்த ஒன்பது பேரின் நினைவாக பொரலையில் உள்ள பொது கல்லறையில் கட்டப்பட்ட நினைவுச்சின்னத்தை திறந்து வைத்து உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தனது மத அல்லது இனக்குழுவைச் சேர்ந்த எவருக்கும் தீங்கு செய்யக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் மதத்தின் மீதான வெறியின் விளைவாக அல்ல, மாறாக அதிகாரத்தைக் கைப்பற்றி பாதுகாக்கும் முயற்சியாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மற்றொரு மதக் குழு அல்லது இனத்தைச் சேர்ந்த எவருக்கும் அவரது தனிப்பட்ட இலக்குகளை அடைய யாரும் தீங்கு செய்யக்கூடாது என்றும் இது அனைத்து இன மற்றும் மதக் குழுக்களைச் சேர்ந்தவர்களுக்கு பொதுவானது என்றும் பேராயர் கூறியுள்ளார்.
இதுபோன்ற விடயங்கள் நடந்தால் இந்த உலகம் வாழ ஒரு துரதிர்ஷ்டவசமான இடமாக மாறும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை முழு நாடும் காத்திருக்கிறது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.