கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஏழாயிரத்து 591பேர் பாதிக்கப்பட்டதோடு 32பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட 23ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக 11இலட்சத்து 21ஆயிரத்து 498பேர் பெருந் தொற்றினால், பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 23ஆயிரத்து 623பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 87ஆயிரத்து 925பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 1,167பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், இதுவரை 10 இலட்சத்து ஒன்பதாயிரத்து 950பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.