2021 ஆம் ஆண்டு பாடசாலை மாணவர்களுக்கான இரண்டாம் தவணை விடுமுறை ஒரு வாரத்திற்கு மட்டுப்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
பாடத்திட்டத்தை உள்ளடக்கும் வகையில் விடுமுறைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், அனைத்து பல்கலைக் கழகங்களையும் எதிர்வரும் ஏப்ரல் 27ஆம் திகதி முதல் மீள திறக்க தீர்மானித்துள்ளதாக கூறினார்.



















