அரசாங்கத்தின் கொள்கை பிரகாரத்தின் காரணமாக அரிசி இறக்குமதியினை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ ஒருபோதும் அனுமதிக்கமாட்டாரென அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஆனாலும் மாறாக அரிசி இறக்குமதிக்கு ஜனாதிபதி அனுமதி வழங்கினால் அரிசியின் விலையை எளிதில் குறைக்க முடியுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் புத்தாண்டு காலங்களில் நாடு மற்றும் சிவப்பு அரிசி ஆகியவற்றினை 100 ரூபாய்க்கு குறைவாக வழங்க முடியும். ஆனால் பால் சம்பாவின் விலையை மட்டும் கட்டுப்படுத்த முடியாதென பந்துல குணவர்தன கூறியுள்ளார்.