பண்டிகை காலங்களில் பொதுமக்களின் நடமாட்டம் காரணமாக கொரோனா தொற்று அதிகரித்திருந்தால் அது நான்கு முதல் ஆறு வாரங்களில் வெளிப்படும் என தொற்றுநோயியல் பிரிவின் பிரதானி வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
தொற்று ஏற்பட்டவர்களுக்கு இரண்டு வாரங்களுக்குப் பின்னரே அறிகுறிகளைக் காண்பிப்பதால் நான்கு முதல் ஆறு வாரங்களில் மட்டுமே அதிகரிப்பை கண்டறிய முடியும் என்றும் கூறினார்.
இதேவேளை நோயாளிகளை அதிகரிப்பபை தொடர்ந்து அடுத்த மூன்று வாரங்கள் மிகவும் அவதானமாக மக்கள் செயற்பட வேண்டும் என கொரோனா தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு நிலையத்தின் தலைவர், இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த மூன்று வாரங்களில் நோயாளிகளை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கவுள்ள நிலையில் இந்த காலகட்டத்தில் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.